டிமான்ட்டி காலனி 2 படத்தின் ஓடிடி தேதி வெளியானது| Demonte Colony 2 OTT date released
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.திரைப்படம் இதுவரை உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.The darkness rises again, and vengeance awaits ?? #DemonteColony2 will be streaming from 27th September only on ZEE5 in Tamil & Telugu@BTGUniversal @AjayGnanamuthu @arulnithitamil @priya_Bshankar @ActorMuthukumar @SamCSmusic @Archana_ravi_ #DemonteColony2OnZEE5… pic.twitter.com/hz24p8Ajh5உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.